கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

jeudi 14 octobre 2010

இமை இரண்டும் முத்தமிட
பார்வை பறிபோனது..........
பார்வையின் ஸ்பரிசத்தில்....
இமைகள் தவித்தன......
கவிதை சொல்லும் கண்களை நீ காட்டிச்செல்கின்றாய்.........என்
உயிரை கூட விடுகிறேன் உன்தன் பார்வையில்.....
தென்றலாய் வந்து என் மேனி தீண்டிச்செல்கிறாய்....அழகு
தேவதை நீயென வியந்து பார்க்கின்றேன்..........
பனி துளி பட்ட பூவிதழ் போல .........உன்
பார்வை பட்டதும் என் தேகம் சிலிர்த்த்ததே..........
நீலவானில் தங்கத்தட்டாய் நிலவுமகள்......
மின்மினிபூச்சிகளாய் நட்சத்திரப்பட்டாளம்..
வெண்பஞ்சுக்கூட்டமாய் மேகங்கள்...வானை
பார்த்திருந்த மண்ணுக்கோ பொறாமை..
வெடித்து சிதறியது மண் மனது.....
தீப்பிழம்பாய் கோப அனலை க்க்கியது......
மண்மனம் புகைந்தது.....பார்த்திருந்த
வானம் கவலையில் முகம் கறுத்தது.........
தன்னையே தானம் செய்தது நெய்..
நெய் செய்கையால் மனம் ஈரமான
திரி..எரிந்து தவம் செய்த்து..........
தானமும் தவமும் சுடரை தந்தது...

my 1st poem...........

அழகான தமிழ் என்தன் உயிரானது ............
அன்பான மொழி நம் நட்பானது
நட்புக்கள் நம்மை வரவேற்குமே..............
நம்பிக்கை வாழ்வின் நிலையானதே..
என்னையும் கொஞ்சம் வாழவிடுங்கள்.
இழப்பதற்கில்லை எதுவும் என்னிடம்.
கடன் தர யாரும்மில்லை.எமை
கவனிப்பார் எவருமில்லை..
எதிரியும் காப்போனுமாய் சேர்ந்து.எனை
...ஏதிலியாக்கிவிட்டார்கள்..இப்போ
ஏக்கத்தையே சொந்தமாக்கிவிட்டார்கள்..
புலத்திலுள்ள புல்லுருவிகள்..என் பெயர்
சொல்லி ஒரு புறம் வயிறுவளர்க்க
களத்திலுள்ள கபோதிகளோ என்னையே
பகடைகாயாக்கி விற்பனை செய்யுதுகள்
பெருநிலப்பரப்பில் சுயமாய் சீவித்தவன்.இன்று
பெறுமதியற்றுப் போய்விட்டேன்.
நெஞ்சினில் பூத்த நெருப்புப்பூக்கள்...
வஞ்சக உலகின் வன்மம் கண்டு..
நெருப்பாய் பூத்த நெருடல்பூக்கள்....
முகன்று பார்க்க முல்லைபூவல்ல..
முயன்று பார்ப்பின் புரியும் ..
முடிவில் பூவை தெரியும்
பூக்களின் புன்னகை நீதானா.....
புதுமை தரும் புரட்சி நீதானா...
நிலவின் முகம் நீதானா...என்
நினைவின் முகவரி நீதானா...
நினைவாக வந்தாய் நீ........
...நிலையாக நிற்பாயா....இல்லை
கனவாகி போவாயா.....
வார்த்தை தவம் கிடந்தேன் ..உனை
வாழ்த்தி இன்பம் கொள்ள..
நேற்றை வரை நெஞ்சில் இருந்தாய்...
இற்றை முதல் நெஞ்சில் வைத்தாய்
முகில்களுக்குள் சண்டை.........அதற்காக
இடி சத்தமிட்டு கத்தியது ....பார்த்து கொண்டிருந்த
மின்னல் தனக்கு தானே தீ மூட்டியது...தாங்கமுடியாத
மழை ஒவென்று கதறி அழுதது......இதுகேட்ட
மண் மனது ஈரமாகியது
சிப்பி தன்னிலொரு முத்து வருவதற்கு......
துளி நீர் ஒன்று தவம் கிடக்கும்...உன்
அகத்தின் அருகினில் அடிமை கொள்வதற்கு
புறத்தில் நின்று நான் தவத்தை செய்கிறேன்....
சிறகின்றி பறவை இல்லை.........
சிற்பியின்றி சிலை இல்லை...
திரியின்றி தீபம் இல்லை.......
அலையின்றி கடல் இல்லை...
அன்பின்றி நீ இல்லை....
நீயின்றி நான் இல்லை....இறைவா...!!!!!!!
மலர்கள் எல்லாம் காத்துகிடக்கின்றன...
உன் வரவுக்காய் மலர்வதற்கு........
வண்டுகளும் கூட காத்துக்கிடக்கிறதே.......
மலரை நுகர்வதற்கில்லை....என்றும்
வாடாத உனை நுகர.........
உனை தொட முடியாமல் உன்னிழல் தொடமுயன்றேன்..
நிழலை கூட உன்னுடன் கூட்டிச்சென்றுவிட்டாய்....ஆனால்
உன் நினைவுகளை என்னில் கட்டிப்போட்டுவிட்டேன்..
எனை வெட்டியெடுத்தாலும் கட்டை அவிழ்க்கமுடியாது.......
காலை வேளை கதிரவன் உதிக்கையில்.
சாலை ஒரம் நடந்து செல்கையில்..நான்கு
காலை உடைய சாம்பல் நிறத்து..
வாலை கொண்ட நாயை ஒரு
பாலை குமரி அழைத்து வருகையில்..நான்
வேலை செல்லும் வேளை வந்ததால்..என்
காலை கடித்தது நாய் ..பார்த்த
பாலை குமரி பதறிபோகிறாள்..நானோ
நூலை போல நொந்துபோகிறேன்..வைத்திய
சாலை செல்ல சொல்கிறாள் ...தான்
மாலை வந்து பார்ப்பதாய் சொல்லி..
சோலை கிளியாய் செல்கிறாள்.......என்
காலை வலி விட்டு மனதை தொட்டது....
மாலை வந்த மங்கை கையில் ஒரு
மாலை இருந்தது .. பார்த்த என்மனதில்
பாலை வார்த்தது போல இருந்தது...
காலை நேரம் கதிரவன் உதிக்கையில்
சாலை வழியாய் சென்றவள் ஒருத்தி என்..
காலை மிதித்து காயம் செய்து மாயமானாள்..
நூலை போல நொந்தது என் மனது
மாலை வந்து மருந்து இட்டு மனதில்
...பாலை வார்த்து பறந்து சென்றாள்........
துள்ளி வரும் மான்குட்டி நீயடி......
பள்ளி கொள்வாய் என்மனதில்...
கள்ளி உன்தன்பார்வையினால்.....
நுள்ளி விட்டாய் என்மனதை.
அலைகள் மோதும் கடலின்...........
அருகே உள்ள மணலில்...
சிலைகள் செய்யும் சிற்பியாய்.
சிலமணித்துளிகள் நிற்க ஆசையே...
அலைகள் வந்து சிலைகளை.......
அடித்து நொருக்கும் போதினில்..
மனதில் வந்து கவலைகள்......
அலை அலையாய் மோதிக்கொள்ளுமே.......
கொஞ்சமாய் எனை கொஞ்சி நின்று
கெஞ்சவிட்டு மீதி தனை தந்து...
வாஞ்சையில் என் மடி மீது வந்து....தன்
கட்டி இழுக்கும் காந்தகண்களால் ......
கதைகள் பேசி.. என் மார்பினில்..தன்
...தலை மோதி மயக்குவான் என் மழலை ..............
போதிக்க இங்கே புத்தர்கள் ஆயிரம்..
சாதிக்க இனி நாம் புதிதாய் பிறப்போம்........
ஆதிக்க சக்திகளை அடக்கியாள..நாம்
மோதிக்க வேண்டும் அதன் ஆணிவேரினை....
பூவினில் உறைந்து இரவினை கழித்தது பனித்துளி..........
இரவினை விரட்டி அருகினில் வந்தது சூரியன்.......
சூரியன் அணைப்பில் உருகிப்போனது பனித்துளி....
பனித்துளி பிரிவை தாங்காது அழுதது பூவிதழ்............
பூப்பறிக்கலாம் வாருங்கள்....என் வீட்டு
தோட்டதில் பூத்துள்ள பூக்களிவை.....
புன்னகைக்காய் பூத்த சிரிப்பு...
பெண்ணுனக்காய் பூத்த பண்பு...
என் தமிழுக்காய் பூத்த நினைப்பு..
அதை வாழவைக்க பூத்த பொறுப்பு..
கயவர்கள மேல் பூத்த வெறுப்பு......
என் மனதில் பூத்த அன்பு....
உனக்காய் பூத்த பூவிது நட்பு..
நில மகள் பனிப்போர்வை பூணுகிறாள்..அங்கே
நிலவு மகள் பால்நிலா பொழிகிறாள்...கூடவே
பூஞ்சோலை வழியே தென்றல் வந்து தழுவுகிறது..
நீயிருக்கையில் இவையெல்லாம் தேவையா.........
என் வீட்டு மல்லிகை மணம் வீசி நிற்கிறது...ஆனால்
எதிர் வீட்டு ரோஜாவோ கண்ணை பறிக்கிறதே...ம்ம்ம்
மணம் வீசினாலென்ன....மனம் கவர்ந்தாலென்ன.........
எல்லாமே மலர்களதானே..சூடிக்கொள்வதும் மங்கைகள்தானே.....
விழியில் உனை வாங்கி.
இமையால் விழி மூடி.
கனவை உருவாக்கி.......
கவிதை தருவேனே....
சொல் எடுத்து மாலையாக்கும் கம்பனல்ல நான்
வில் எடுத்து அம்பு தொடுக்கும் அர்சுனனல்ல நான்
கல் எடுத்து வீசும் கயவர் கூட்டமில்லை நான்
வால் பிடித்து வாழ்வை வழமாக்கும் வஞ்சகனல்ல நான்
கோல் கொண்டு பார் போற்ற வாழ்ந்த தமிழன் நான்
விண்ணில் விளையாடும் மேகக்கூட்டங்கள்..அதனால்
மண்ணில் வந்துவிடும் மழைநீரின் ஓட்டங்கள்..
பெண்ணில் உருவாகும் காதல் ஓட்டங்கள்..அதனால்
கண்ணில் ஈழையோடும் நீரின் மூட்டங்கள்
என்னை எப்பொழுதும் இழுத்து வைத்திருகிறாய் ..நான்
இறந்தாலும் உன்னுள் புதைத்து வைத்திருக்கின்றாய்...
உன்னிடம் மட்டும் எனை ஈர்க்கும் சக்தி இல்லாவிட்டால்...உனை
விட்டு விலகி விண்ணோக்கி சென்றிருப்பேன்
மனம் எனும் நிலம் உழுவோம்....அதில்
அன்பு எனும் விதை நடுவோம்...அங்கே
பண்பு எனும் நீரூற்றி ....அதை
பக்குவமாய் வளர்ப்போம்.....
பொறாமை களை பிடுங்கி......பின்
...பொறுமை உரம் இட்டு....
அருமையாக வளர்ப்போம்.......அறுதியில்
அறுவடைதனில் அகிலம் உன்வசம்
அலைமோதும் கடலோரம் அழகான மணல்மேட்டில்...
குழிதோண்டி நீருற்றை கண்டுகொள்வோம்...
கடல் நீரில் கால் நனைத்து அலையோடு விளையாடி......
கடலோரம் காலாற நடந்து செல்வோம்......
இதமான தென்றலும் சுகமாக வீச...அங்கு
இனிதான கதைகள் பேசிக்கொள்வோம்
மழை மூட்டம் வந்து நுனிமூக்கில்....மழை
துளிபட்டு கடலோடு பிரிவு கொண்டிடுவோம்.....
வெண்ணிலவே நீ பௌர்ணமியில் கூட வரவில்லையே ஏன்
இன்று என்ன பூரண கிரகணமா.....எனை
காக்க வைப்பதில் உனக்கு அத்தனை சுகமா....அதைவிட சுகம்
உனக்காக காத்திருப்பது.........
இசை கொண்ட தமிழ் அழியாது...யார்
வசை பாடினும் அது வாழும்...நாம்
விசை பலகை கொண்டு ....முடிந்தால்
அசை என்று அறைகூவல் விடுவோம்
தேய்ந்து தேய்ந்து தெரியாமல் போகும் நிலவே...உனக்காய்
காய்ந்து காய்ந்து கருகி போகிறேன்...தினமும்
மாய்ந்து மாய்ந்து சொல்வது புரியலயா..நான் அழைக்கையில்
பாய்ந்து பாய்ந்து செல்கிறாயே ஏன்.........
பூக்களின் புன்னகை நீயா........
நீ பேசிடும் வார்த்தைகள் தேனா......
தேனினை குடிக்கும் வண்டு நானா........
பூவினை சூடிக்கொள்ளலாமா.......
வாசல் வந்தது வண்ண நிலவு...அதனால்
ஊசல் ஆடியது என்தன் உள்ளம்...நிலவிடம்
காதல் கொண்டது என்தன் மனம் ....நிலவோ
சாதல் கொள் நீ என சொல்லி சென்றது...
தன்னை சுற்றிவரும் நிலவிடம் பூமிக்கு காதல்..
தொலைவிலுள்ள சூரியனிடம் தான் நிலவுக்கு காதல்..
ஒரு பகல்பொழுதில் மூவரும் வரிசையாக சந்தித்துவிட்டனர்.....
நிலவின் காதல் பூமி அறிகிறது..பூமி முகம் இருண்டுபோகிறது...
காலைக்கதிரவன் கண்விழித்தான்...அவன்
நீலவானை எட்டிப்பார்க்கையிலே..
வானம் வெட்கி சிவக்கிறதே...அதுவரை
காதல் கொண்ட நிலவும் காணாதுபோய்விட்டாள்
என் சுவாச காற்றில் நுழைந்து....
என் வசமாய் ஆகிப்போகினாய்....
உனக்காய் கரைகின்ற என் மனதில்.....
நீ கரையாதிருக்க உனை ...என்
உயிருடன் ஒட்டிவைப்பேனே.........
மனதில் வந்து அழகாய் பூத்தாய்......
கனவில் வந்து கதைகள் சொன்னாய்..
நினைவில் நின்று நிம்மதி தந்தாய்......
உறவில் என் உயிராய் வந்தாய்
மழை தடுக்கும் குடை வேண்டாம்..........
அலை தடுக்கும் கரை வேண்டாம்..........
பயிர் தடுக்கும் களை வேண்டாம்..........
வீரம் தடுக்கும் பயம் வேண்டாம்..........
பாசம் தடுக்கும் வேசம் வேண்டாம்..........
...அன்பை தடுக்கும் பொறாமை வேண்டாம்..........
அறிவை தடுக்கும் ஆணவம் வேண்டாம்..........
காதல் தடுக்கும் காமம் வேண்டாம்..........
பக்தி தடுக்கும் பகட்டு வேண்டாம்..........
முக்தி தடுக்கும் மோகம் வேண்டாம்..........
உன்னை நான் பார்க்கும்போது
கண்ணை நீ முடிக்கொண்டாய்....நான்
என்னவோ செய்யும் போது..
என்னை நீ பார்க்கின்றாயே..
விண்ணை நீ தாண்டிக்கொள்ளும்.......
வல்லமை கொண்டாய் நீயே............
மின்னலாய் வந்து என்தன்.......
மனதினை கொள்ளைகொண்டாய்...
நீலவண்ண கண்ணா என்தன்
நெஞ்சில் குடியும் கொள்வாய்..உன்
பாசவலையில் என்னை கொஞ்சம்
பற்றிக்கொள்ள செய்வாய்..........
குழலை பிடித்த கையால் ..நீ
கோதை அணைத்துக் கொள்ளும்..
விதத்தை பார்த்து நானும்.
வியந்து போயிக்கொண்டேன்..என்ன..
மாயம் செய்து நீயும் எனை உனில்
வாசம் கொள்ள செய்வாய்
அன்பினில் விளைந்து அறிவினை
தந்து அகிலமும் நீயானாய்...
பண்பினில் கலந்து பாசத்தை
பொழிந்தாய் பரிதவிக்கும் எனக்கு.........
உன்னில்லிருந்து என்னுள் வந்து
...விதைத்தாய் எனில் உன்னை...........
விந்தை செய்யும் உன்தன்
அன்பில் திளைத்துப்போகிறேன்.......
மேகத்தில் மறைந்துள்ள நிலவே ......உனை ...
என் வீட்டு முற்றதில் நின்று தேடுகின்றேன்..
உன் தாகத்தில் துடிக்கும் எனக்காய் ..நீ
வானத்திலிருந்து வாராயோ...வரும்வழி
தெரியாதிருந்துவிட்டால் ....வரும்
மழைத்துளியுடன் சேர்ந்து வாராயோ...
மழைத்துளி மண்ணைத்தொடுமுன்...அதை
கைகளில் ஏந்திக்கொள்வேனே...உனை
துளிதனில் கண்டுகொள்வேனே...
நெஞ்சினில் வந்திடும் பனிக்கூட்டம்......
உன்தனை தொட்டதும் உருகியதே....
கண்களில் தோன்றிடும் அனைத்திலும்...........
விம்பங்கள் நீயாய் தெரிகிறதே....
பெய்திடும் மழைகூட உன்தன்
பெயரினை சொல்லி பெய்கிறதே......
மழை ஏந்திடும் மண்கூட உன்
பெயர் கேட்டு ஏங்கியதே
பற்றி எரிக்கும் நெருப்பாய் ஆனாய்..எனை
சுற்றி வளைத்து மனதில் தூண்டில் இட்டாய்...
வற்றி விடாத அன்பை கொட்டிவிட்டாய்...
நெற்றி கண்திறந்து நேசக்கணை எறிந்தாய்.......
விழிகளை வாளாக்கி எனை வெட்டினாய்.....
காயம் இன்றி மாயம் செய்தாய்....
மொழிகளை மௌனமாக்கி எனை பற்றினாய்......
மோகம் என்ற யாகம் செய்தாய்
துள்ளி வரும் பெண்ணே..உன்
வெள்ளி கொலுசு ஓசை கேட்டு..
கள்ளி நீ என்தன் மனதை கொஞ்சம்..
கிள்ளி விட்டாயடி
மொட்டுவிடும் மலரில்...
பொட்டு வைத்தால் போல்....
வண்டு ஒன்று வந்து நிக்க..
மகிழ்வில் மலர்ந்தது மலர்......
வலி தாங்கும் இதயம்...
கிலி கொள்ளாது...யாரையும்
பலி கொடுத்து...அடுத்தவர்
பழி எடுக்காதே...