கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mardi 12 octobre 2010

இருப்பிழந்து போனாலும் ...........மனதில்..
நெருப்பிழந்து போகவில்லை..........
விடுதலை தீ விளையாட்டல்ல .......என்றோ
ஒரு நாள் எரிக்கும் ...........எதிரியின்
எண்ணதீதினை கருக்கும்
முத்துத்துளிகள் முகத்தில் பட...
வானம் நோக்கி விழிகள் போக...
நீலவானம் கருமை கொள்ள...
வானிலிருந்தோர் அருவி வந்த்தே..
தருமன் ஒன்றும் சத்தியசீலன் அல்லவே...
தன்னை காக்க குருவுக்கே பொய்யுரைத்தவன்தானே...
ஆனையை ஆளாக்கி அழகாய் சொன்னவன்தானே
கருவை சுமந்தாள்..உனக்காய்
தெருவை அளந்தாள்..உனக்கோர்
உருவை தந்தாள்..அவளுக்கு
பெருமை கொடுப்பாயா...
பூ இல்லா தோட்டத்தில்..தேனுக்காய்
வண்டுகள் வட்டமிடுகின்றன..அங்கு
நீ இருப்பதால் தானா.....வானுக்கும்
உன்மேல் ஆசைவந்து மழை தூவியதே
என் நெஞ்சில் நீ
உன் நினைவில் நான்..
பஞ்சிலிட்ட நெருப்பாய்...
பற்றினாய் என்னில்.......
அழகே இது உனக்காகவே...
அன்பை அள்ளி தெளிக்கின்றேன்..
பனிக்கால மழைக்காற்றாய்..உன்
பக்கம் வருவேனே...
வெயில்கால வேனில் காற்றாய்..உன்
...வியர்வை துடைப்பேனே...
நிலவை பிடித்து உன் நெற்றியில்...
பொட்டாய் வைத்து கொள்வேன்..உன்
நிழலாய் யாரும் வருவதற்கு..
அனுமதி கொடுக்கமாட்டேன்.
விடியலுக்காய் மலரும் மலர்கள்..வாழ்வின்
விடியலுக்காய் மலரும் மனங்கள்
பிள்ளை அழுவதற்காய் கிள்ளி........
தொட்டிலை ஆட்டும் உத்தமர்...
எத்தனை பேர் இந்த உலகில்...
வேடதாரிகளின் கபட நாடகம்..
புரிந்து கொள்ளாதோர் எத்தனை........
மலர் ஒன்று வண்டிற்காய்
தேன் ஏந்தி நிற்கிறது..உன்
மனம் என்ற மலருக்காய்.
வண்டாகி போகின்றேன்
இரவோடு ஓடிவரும் அழகான வெண்ணிலவே....
இதயத்தை அள்ளி செல்லும் மாயத்தை சொல்வாயா..
சுட்டெரிக்கும் சூரியனின் தீக்கதிர்களை வாங்கி...
பனிமழையாய் பொழியும் உன் மாயத்தை என்ன சொல்வேன்
பூவின் வாசம் காற்றும் காவி செல்லும்...
காவி செல்லும் வழியில் ...உன்தன்
கள்ளச்சிரிப்பை பார்த்து ..உன்னில்
காதல் கொண்டு வாசம்...வாசம் செய்ததோ
வெள்ளிக்கிண்ணம் கைகளில் ஏந்தி..
கிண்ணம் நிறைய பாலினை நிரப்பி..
பாலகன் வெற்று வயிற்றுடன் ..
எஜமானின் நாய்க்குட்டிக்காய்.
பாசமாக ஊட்டுகிறான்..நன்றியாய்
...வாலை ஆட்டிய நாய்குட்டியை...
எஜமான் ஏ.சி காரில் ஏற்றி செல்கிறான்..
குட்டி விட்டு வைத்த மீதி பிஸ்கட்டை..
குழந்தை உண்கிறது........
வறுமை...வெறுமை கொண்ட மனதிலா
மழை நின்றதும்.....
மரம் அழுதது..
இலைகளில் வழியும்
நீர்த்துளிகள்
அலைகள் மோதும் கடலின்...........
அருகே உள்ள மணலில்...
சிலைகள் செய்யும் சிற்பியாய்.
சிலமணித்துளிகள் நிற்க ஆசையே...
அலைகள் வந்து சிலைகளை.......
...அடித்து நொருக்கும் போதினில்..
மனதில் வந்து கவலைகள்......
அலை அலையாய் மோதிக்கொள்ளுமே.......
இரவெல்லாம் பூவிதழில் தங்கிய பனிதுளி........
காலை சூரியனின் கபட சிரிப்பில் மயங்கி.....
உள்ளம் பறிகொடுத்து உருகியதால்...
துளியிடம் காதல் கொண்ட பூ அழுத்து.....
நாட்டு நடப்பு................
மாற்றத்துக்காய் காத்திருந்து........
ஏமாற்றதினை கண்டுகொண்டேன்
கனவுகளின் வரும் என் கவிதைதுளியே......
காவியதில் வரும் கவிநயமே....அழகு
ஒவியதின் தூரிகையே .....பெண்ணே
நீ என் கனவு தாரிகையே
 பனி படரந்த மலர்கள பட்டும் ....என்தன்
மேனி சிலிர்க்கவில்லை...ஆனால்
பாவை உன் பார்வை பட்டதும்.......
உள்ளம் துடித்ததடி..உயிர் தவித்தது
மீண்டும்...மீண்டும் உன் நினைவுகள் ...எனை
தீண்டி... தீண்டி செல்கிறதே...........
வேண்டும்... வேண்டிம் உன உறவுகள்...அதை
வேண்டி..வேண்டி மனம் அலைகிறதே
வெண்ணிலவும் வந்து விடியும் காத்திருக்கும்..........
பெண்ணரங்கே உன் வரவுக்காய்......
எண்ணியிங்கே ஏக்கமுற.......
கண்ணிலவள் காவியமாய் வீற்றிருப்பாள்
தென்றலின் தொடுகை தேகத்தை வருடும்..........
பனிதுளிகளின் படுகை மேனியில் சிலிர்க்கும்.....
மழையின் சாரல் மனதை ஈர்க்கும்...........உன்
நினைவின் தீரம் உயிரை உலுக்கும்.................
பனித்துளி பட்ட பூவிதழ் .....பட்டு
சிலிர்த்த்து மேனி.......அதை விட...
உன் பார்வை பட்டதும் .......சிலிர்த்த்து
தேகம்.....தவித்தது உள்ளம்
தீந்தமிழ் மேல் நான் கொண்ட நேசம்...மாறாதே......
தேன் தமிழோடு நான் கொண்ட ..காதல்...மாறாதே......
பைந்தமிழ்மீது நான் வைத்த பாசம்...மாறாதே......
செந்தமிழ்மீது நான் வைத்த அன்பு.......மாறாதே
விழி வழியாய் நுழைந்து இதயதிலே விழுந்தாய்..ஒரு
மொழி இன்றி நீ பேசும் மௌனங்கள்..... என.
உயிரோடு உறவாடுதே
அமுதினை பொழிகின்ற அமுது நீயே......
அன்பினை அளிக்கின்ற அகல் நீயே.....
பகலினில் வருகின்ற நிலவு நீயே.........
பாசத்தை பொழிகின்ற நட்பு நீயே
பிரியாதவரம் வேண்டும் ............
பிரிந்தாலும் மறவாதவரம் வேண்டும் ............
மறந்தாலும் மீண்டும் நினைகின்ற வரம் வேண்டும் ............
நினைகின்ற பொழுதில் மனம் நெகிழ்கின்ற வரம் வேண்டும் ............
நெகிழ்கின்றவேளை உயிர் பிரிகின்ற வரம் வேண்டும் ............
......இதுதான நட்பு!!!!!!!!!!! இனிதான நட்பு !!!!!!!!!!!!!!!!!!!!
நிலவுமகள் இறங்கி நிலமருகே வந்தாள்.......என்
கனவுலகில் வந்து கவிதையினில் கரைந்தாள்....
சிறகடிக்கும் பறவையாய் நினைவினிலே வந்தாள்..
சிதறடித்து மனதை கலங்கடித்து சென்றாள்
தாய் வழி வந்த மொழி தனித்துப்போவதா..............
தமிழ் மொழி என்தன் உணர்ச்சிப்பூவடா.........
வாய் வழி பேசும் மொழியெல்லாம் நமதாகுமா..........
வாழும் வரை தமிழ் என் உயிர்ப்படா........
கருணையின் வடிவினாய் கண்ணா........கண்
மூடினும் உனமுகம் காண்பேன்.....
அன்பினின் உருவமே கண்ணா....அறிவு
அனைத்தையும் அருளுவாய்யே.........
இனிமையில் இருப்பாய் கண்ணா.......இருள்
...தனை போக்கி ஒளியினை தருவாயே...........
இரவு சூரியனே ........உன்னால்
இருளை போக்க முடிவதில்லையே ஏன்......
காலைககதிரவனின் கதிர்களை............. களவாடிக்கொண்டதாலா............
கவிதை சொல்லும் கண்களை நீ காட்டிச்செல்கின்றாய்.........என்
உயிரை கூட விடுகிறேன் உன்தன் பார்வையில்.....
தென்றலாய் வந்து என் மேனி தீண்டிச்செல்கிறாய்....அழகு
தேவதை நீயென வியந்து பார்க்கின்றேன்..........
பனி துளி பட்ட பூவிதழ் போல .........உன்
பார்வை பட்டதும் என் தேகம் சிலிர்த்த்ததே..........
எரிந்து அழிந்தது தீக்குச்சி............தீபம் ஏற்ற...
உருகி தவித்த்து மெழுகுவர்த்தி........தீக்குச்சிக்காய்.....
அழகான தமிழ் என்தன் உயிரானது ............
அதிலொன்று நீயானது..........
நட்புக்கள் நம்மை வரவேற்குமே..............
நம்பிக்கை வாழ்வின் நிலையானதே.....
இனிதான நட்பும் நீயானதே............
இமை மூடிக்கொண்டாலும மறையாததே.........
நினைவாலும் கனவாலும் உருவானதே..........
நிசமான அன்பினால் உயிரானதே....
கவிதை சொல்லும் கண்களை நீ காட்டிச்செல்கின்றாய்.........என்
உயிரை கூட விடுகிறேன் உன்தன் பார்வையில்.....
தென்றலாய் வந்து என் மேனி தீண்டிச்செல்கிறாய்....அழகு
தேவதை நீயென வியந்து பார்க்கின்றேன்..........
பனி துளி பட்ட பூவிதழ் போல .........உன்
பார்வை பட்டதும் என் தேகம் சிலிர்த்த்ததே..........