கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mercredi 13 octobre 2010

ஆறுதலை வேண்டி ஆறுதலையோனிடம் போனேன்..அவனே
மாறுதலை வேண்டி மயிலேறிப்போய்விட்டானாம்...பின்
மாறுதலை கொண்டோனிடம் போனேன் அவனோ...யாருக்கும்
ஊறுதலை கொடுக்காது ஊரோர மரதடியில் ஒதுங்கிவிட்டானாம்..
மலரே ஒரு வார்த்தை சொல்லாய்........
மணம் வீசும் வார்த்தை சொல்வாய்...எனை
பறிக்காதே என்று பகர்வாய்...அழகை
பார்த்து மட்டும் செல் என சொல்வாய்
நேற்றுவரை நேரம் போகவில்லை....இன்று
உனை பார்த்தமுதல் நேரம் போதவில்லை...
காற்றும் கவிதை சொல்லும் மாயம் கேக்கிறேன்..
கண்களின் ஏக்கம் உன் கனவுக்காய் கரைவது
அண்ணலும் நோக்கினான்.........
அவளும் நோக்கினாள்.......
புதிய நோக்கியா மூலமாய்......
கைக்குள் அடக்கமாய்.........
கதைகள் பேசி....
......கலகம் மூட்டி.....
வழி தெருவில்.......
தனக்கு தானே பேசி.....
அழைப்பு மணி...
அடுத்தவனுக்கு வர..
இவன் தன் சட்டை
பையை தடவிக்கொள்ளும்...
பதற்றம் ..பார்க்க பரிதாபம்...!!!
பூவினில் பின்னிய கூடையிலே....உன்
புன்னகை அள்ளிப்போட்டு விட்டு...
காற்றினில் ஏற்றி அனுப்பி வைப்பாய்...
கைகளில் ஏந்தி கொள்வேனே....
பூவின் பாரம் தாங்காத...முல்லை
பாரி தேரினை தழுவியது...
முல்லையின் தழுவலில் முழ்கிய..
தேர் பாரியிடம் விடைபெற்றது...
கால்கொலுசின் ஓசை கேட்டு.......
கவிதை ஒன்று நடைபயில...உன்
வளையல் சத்தம் கேட்டு....வரும்
வழிகளெல்லாம் நாணம் கொள்ள..
வானிருந்த நிலவும் உனை பார்த்து..
நாணமுற்று வெண்மேகமதில் மறைய...
தேடிவந்து தென்றலும் ....உனை
தீண்டிக்கொள்ள ஆசை கொண்டதே
மைவிழியாள் மனம் நோக மன்னனவன் பேசிவிட..
மைவிழியில் நதி பிறந்து மண் தனையும் நனைத்துவிட..
மன்னனவன் மனம் கரைந்து மங்கையிடம் மையல் கொள்ள...
ஊடல் கொண்ட காதல் என்பதும் இதுதானோ.......
இனிதாய் புலரும் காலைப்பொழுதில்...
அழகாய் நீயும் புன்னகை செய்வாய்.....
கனிவாய் நாளும் கடந்து செல்ல...
மகிழ்வாய் நீயும் வார்த்தைகள் பகர்வாய் ........
பிரியாத வரம் ஒன்று .......
தருவாயா முருகா...
வள்ளி தெய்வானையுடன்...
வானம் எல்லாம் மயில்..
வாகனதில் செல்பவனே....
பக்கம் வர அருள் தாருமையா........
நட்சத்திரப்பூக்கள் நடுவே தங்கநிலா..
பூரிப்பில் வானம் புதுப் பொலிவுடன்....
எங்கிருந்தோ வந்த மழை மேகம்...
எல்லாவற்றையும் மறைத்து விட்டதே...
துயரம் தாங்காது வானம் அழுதது...
குளிர் காற்றும் சிலிர் பனியும்.......
துளிர் விடும் செடிமீது படர....
ஒளிர் விடும் சூரிய பார்வையில்...
தளிர் தலை நிமிர்ந்ததே
கண்கள் காட்டும் உலகை...
கண்ணீர் காட்டும் உள்ளத்தை...
அலைகள் மோதும் கடலின்...........
அருகே உள்ள மணலில்...
சிலைகள் செய்யும் சிற்பியாய்.
சிலமணித்துளிகள் நிற்க ஆசையே...
அலைகள் வந்து சிலைகளை.......
...அடித்து நொருக்கும் போதினில்..
மனதில் வந்து கவலைகள்......
அலை அலையாய் மோதிக்கொள்ளுமே.......
பொன்னின் நிறமும்...
பூவின் மணமும்...உன்னில்
இருக்க கண்டேன்..
மென்னம மனமும்...
தன்மை குணமும்...உன்னில்
அடைக்கலம் கொண்டதோ...
விதை முளைத்து மரம் வளர்ந்து.............
இலை பரப்பி நிழல் கொடுக்கும் வரை...
வெயில் கொடுமை அனுபவிக்க முடியுமா...
வளர்ந்தமரம் பார்த்து நிழல் தேடுவது போல்...
நிச்சயமில்லா எதிர்காலதுக்காய்...
நிதர்சன நிகழ்காலம் இழக்கமுடியுமா...
மரம் ஒன்றினை வளர்ப்போம்...அதுவரை
நிழல் நாடி செல்வோம்.........
தீட்டும் போதுதான் கத்தி கூர்மை கொள்ளும்....
மீட்டும் போதுதான் வீணை இசையை கொடுக்கும்...
ஊட்டும் போதுதான் மழலை உணவை உண்ணும்..
பாராட்டும் போதுதான் கலைஞன் உவகை கொள்வான்.....
விதை ஒன்று நட்டேன்..கவிதையாக
உரம் இட்டு வளர்த்தேன் மரமானது..
உணர்வென்ற உயரிய மனமாது....
கல்லாமை ...உனில்
இல்லாமை செய்
பொல்லாமை..தனை
நில்லாமை ஆக்கு
இறைக்க இறைக்க தான் ஊறும்....அன்பு
நிறைக்க நிறைக்க தான் சேரும்..பணம்
மறைக்க மறைக்க தான் கூடும்...ஆவல்
குறைக்க குறைக்க தான் அடங்கும்..கோபம்
அழகாய் சிரிக்கும் மலர் ..நட்..பூ
பரிவாய் இருக்கும் மலர்...பண்..பூ
தனிமை கெடாத மலர்...கற்...பூ
எனக்கான உன்தன் மலர்...நினைப்...பூ ....
வாய் பேசா மொழிகள்........
விழி பேசியதோ...நீ
வீசும் பார்வை .....
உயிர் பறிக்கிறதே........
உன் தோல்விகளை ........
உன் ஆசானாக ஏற்றுக்கொள்...
உன் வெற்றிகளை ............
உன் நண்பனாக மாற்றிக்கொள்
பூங்காற்றும் கவிதை சொல்லும்.........
உன் மீது பட்டு செல்கையில்....
நதி கூட அழகாகும்
நீ அதில் கால் நனைக்கையில் ..............
பூவின் மேல் உறங்கும் பனித்துளியாய்...
பனித்துளி மேல் படரும் பூங்காற்றாய்...
பூங்காற்றுடன் கொஞ்சும் உன் மூச்சாய்..
மூச்சினில் கலந்து நெஞ்சினை அடைவேன்.......
தொழிலாளிகள்...........
கறுப்பு வைரங்கள்......
ஆனால்.......
புத்திசாலி முதலாளிகள்..........
கரும் கற்களாகவே வைத்திருப்பர்............
இரவினில் நிலவுடன் இணைந்ததாலோ.....
விடியலில் வானம் நாணி சிவந்தது.....இல்லை
கதிரவன் வரவை கண்டதாலோ.........
காதலில் முகம் சிவந்தது.....புரியவில்லை..
பார்வை எனபது எது...
காற்றை கூட பார்க்க முடியாத கண்கள்......
கடவுளையா காணப்போகிறது........
கண்களை மூடி காண்கின்றாயே...கனவு
அது எந்த வகை பார்வை.....
...முடிந்தால் மூன்றாம் கண்ணை திற....
முடியும் உன்னால் அவனை காண......
பேசும் நிலவினை வானில் காண்கிறேன்..........
பேதை என்மனம் ஏக்கம் கொள்ளுதே.....
வானில் நிலவு வலம் வரும் போது...
மேகம் வந்து மெல்லென தழுவுதே...
மேகத்தழுவலில் நாணம் கொண்ட..
வெண்நிலவு ஓடி ஒளிந்தது.....
பகலிலில் தோன்றும் நிலவே...உனை
பார்க்கையில் கரைந்தே போகின்றேன்..
இரவில் தோன்றும் நிலவை ...நீ
ஏக்கம் கொள்ள வைக்கிறாய் .......
ஏழ்மை.........
கஞ்சிக்கு போட உப்பில்லை அவளிடம்......
கண்ணீர் துளிகள் கஞ்சியில் பட ருசித்தது
கண்கள் காட்டும் உலகை...
கண்ணீர் காட்டும் உள்ளத்தை...
விண்ணும் காட்டும் நிலவை....
விண்ணீர் காட்டும் செழிமை
சிலுவையில் மனதை அறைந்தாய்........போதாதென்று.
ரத்தம் வடியாமல் வார்த்தைக் கத்தியால் குத்தினாய்........
செத்துப்பிழைக்க நான் என்ன யேசுவா..........
சோகம் என்தன் சொத்தாயாகினாயே
காற்றை சிறை பிடித்து...கவளமாக்கி
பையன் கையில் கொடுத்துவிட...அதில்
ஓட்டை போட்டு அவன் ..உள்ளிருந்த
காற்றை பறக்கவிட்டான் சுதந்திரமாய்......
அழகாய் பூக்கும் பூக்கள் கூட......
பறிக்கும் போது பரிதவிக்கும்.....
நேசம் அறியாத மனிதன்..
வேடம் பூண பறிக்கையிலே..
பாசமாக பழகிய கொடியிடம்...
விடை...பெறுவதனாலோ...
சிறகுகள் இருந்தும்....
பறக்க மனமில்லை...
உன் கைகளில்......
தவழ்வதாலோ.....
பகலில் தோன்றும் நிலவே...உனை
பார்க்கையில் கரைந்தே போகின்றேன்..
இரவில் தோன்றும் நிலவை ...நீ
ஏக்கம் கொள்ள வைக்கிறாய்
மேகம் வந்து நிலவை மறைத்ததால்...நான்
சோகம் கொண்டு தலை தொங்கப்போட்டேன்...
பாவம் நான் என நினைத்த காற்றும்..வான்
மேகம் விலக்கி என் சோகம் போக்கியது
என்னில் உன்னை புதைத்தேன்...
உயிரை அங்கே விதைத்தேன்...
என் கண்ணின் கருவிழி அகற்றி..
உன்னை அங்கே உருவகித்தேன்............
இனிதாய் ஒரு பொய் சொல்வாய்.........
இனி நானே என சொல்வாய்.....இந்த
பொய்களும் எல்லாம் வெறும்
பொய்களென உண்மை சொல்வாய்.......
வானம் முழுக்க நிலவை கேட்டேன்........
நிலவாய் வானம் மாற்றி தந்தாய்...
நன்றி கெடாத நட்பை கேட்டேன்..
நன்றியை என்தன் நட்பாய் தந்தாய்....
யுத்தம் இல்லா உலகம் கேட்டேன்...
......நித்தம் அன்பை பரிசாய் தந்தாய்...
துக்கம் இல்லா தூக்கம் கேட்டேன்..
பக்கம் முழுவதும் இனிமை தந்தாய்
உன்னை என்னில் உறைய கேட்டேன்..
என்னை நீயாய் ஏற்றுக்கொண்டாய்
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்...
எளிமை என்னை சூழ தந்தாய்.......
புல்லை போன்ற பணிவை கேட்டேன்...
மென்மை கொண்ட மனதை தந்தாய்
பண் கொண்ட பாடல் பயில கேட்டேன்....
பாடலகள் அறியும் மனதை தந்தாய்...
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்..
கவிதை எழுதும் யாலம் தந்தாய்
ராஜராஜனின் வாளை கேட்டேன்....
சோழ வம்சத்து வாள்களை தந்தாய்..
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்....
வார்த்தைகள் எல்லாம் தேனாய் தந்தாய்..
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்....
...விரல்கள் எல்லாம் எழுத செய்தாய்
அலைகடலின் ஒரத்தில் ...உனை
அழகாக எழுதி வைத்தேன்..உன்
அழகில் மயங்கிதானோ......
அலையும் அள்ளி சென்றதோ
கல்லாமை ...உனில்
இல்லாமை செய்
பொல்லாமை..தனை
நில்லாமை ஆக்கு
முடியும் என்று... நீ
முடிவு செய்..பின்
முடிவு உன் கையில்
முடியும் வரை துடிக்காதே...
கனவு ........
நிறைவேறா ஆசைகள்......
நிறைவேறும் இடம்...
நிறைவேறும் ஆசைகள்...
உருவாகும் இடம்...................
விளைச்சல் அற்ற நிலமும்....
உளைச்சல் கொண்ட மனமும்...
எதற்கும் உதவாது...ஆனால்
உழவு செய்து நிலத்தையும்..
உரமூட்டி மனதையும்..
அழகாய் உருவாக்குவோம்
இனிதாய் ஒரு பொய் சொல்வாய்.........
இனி நானே என சொல்வாய்.....இந்த
பொய்களும் எல்லாம் வெறும்
பொய்களென உண்மை சொல்வாய்.......
கால்கொலுசின் ஓசை கேட்டு.......
கவிதை ஒன்று நடைபயில...உன்
வளையல் சத்தம் கேட்டு....வரும்
வழிகளெல்லாம் நாணம் கொள்ள..
வானிருந்த நிலவும் உனை பார்த்து..
நாணமுற்று வெண்மேகமதில் மறைய...
தேடிவந்து தென்றலும் ....உனை
தீண்டிக்கொள்ள ஆசை கொண்டதே
சூரியவிளக்கில் சுடர் விட்ட கிழக்கு.....
கிழக்கு சிவந்து கொண்டது நாணம்...
நாணம் வந்ததால் வானம் சிவந்தது..
சிவந்த வானில் சூரியன் மிதக்க...
மிதந்த வேளை வானம் மலர்ந்துகொண்டது
வாழ்க்கை என்பது அழகிய கண்ணாடி..
பார்த்துக்கொள்வதும் பயன்படுதுவதும்..
உன்தன் கைகளில் ...கவனமின்றின்..
காயம் கைகளில்...மனதினில்.......