கையடக்க கணனியுடன்...

கையடக்க கணனியுடன்...

mercredi 13 octobre 2010

வானம் முழுக்க நிலவை கேட்டேன்........
நிலவாய் வானம் மாற்றி தந்தாய்...
நன்றி கெடாத நட்பை கேட்டேன்..
நன்றியை என்தன் நட்பாய் தந்தாய்....
யுத்தம் இல்லா உலகம் கேட்டேன்...
......நித்தம் அன்பை பரிசாய் தந்தாய்...
துக்கம் இல்லா தூக்கம் கேட்டேன்..
பக்கம் முழுவதும் இனிமை தந்தாய்
உன்னை என்னில் உறைய கேட்டேன்..
என்னை நீயாய் ஏற்றுக்கொண்டாய்
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்...
எளிமை என்னை சூழ தந்தாய்.......
புல்லை போன்ற பணிவை கேட்டேன்...
மென்மை கொண்ட மனதை தந்தாய்
பண் கொண்ட பாடல் பயில கேட்டேன்....
பாடலகள் அறியும் மனதை தந்தாய்...
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்..
கவிதை எழுதும் யாலம் தந்தாய்
ராஜராஜனின் வாளை கேட்டேன்....
சோழ வம்சத்து வாள்களை தந்தாய்..
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்....
வார்த்தைகள் எல்லாம் தேனாய் தந்தாய்..
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்....
...விரல்கள் எல்லாம் எழுத செய்தாய்

Aucun commentaire:

Enregistrer un commentaire